search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள் கடத்தல்"

    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
    • போதை பொருட்கள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், தனிப்பிரிவு போலீஸ் சதாசிவம் மற்றும் போலீசார் இணைந்து நள்ளிரவு 1 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 3 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட கஞ்சா ஒரு கிலோ, பான் மசாலா ஹான்ஸ் 30 கிலோ, விமல் பாக்கு 33 கிலோ, கூல் லிப் 12 என மொத்தம் 97 கிலோ போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும்.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் குறித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி, கே.எம்.எஸ். ஹவுஸ் வீடியோ சேர்ந்த அபூபக்கர் (50), புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினம், வடக்கு தெருவை சேர்ந்த முகமது இட்ரோஸ் (27), மணல் மேல்குடி, வடக்கு தெருவை சேர்ந்த ஷேக் அப்துல்லா அகமது (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் பிரிவு வி.என்.எஸ் நகர் பகுதியில் தங்கியிருந்து போதை பொருட்களை வாங்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 97 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார்சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை பொருட்கள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரின் பின்புற பகுதியில் பலகை மூலம் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • ரகசிய அறையில் பண்டல், பண்டலாக கொகைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    ஹூஸ்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் ரக்குவெல் டொலொ ரஸ் அன்டியோலா (வயது 34) சிறந்த ராக் இசை பாடகியான இவர் சமூகவலை தளங்களிலும் பிரபலமாக உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 லட்சத்து 19 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

    இதேபோல அமெரிக்காவில் மாடல் அழகியாக இருந்து வருபவர் மெலிசா டுபோர் (30) இவர் டிசைனர் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று டொலொ ரஸ் அன்டியோலாவும், மெலிசா டுபோரும் விலை உயர்ந்த காரில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஹூஸ்டன் நகரில் இருந்து அலபாமா நகருக்கு சென்று கொண்டு இருந்தனர். 2 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் சென்ற காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையின் போது காரின் பின்புற பகுதியில் பலகை மூலம் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ரகசிய அறையில் பண்டல், பண்டலாக கொகைன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.24 கோடியே 73 லட்சம் ஆகும். இது தொடர்பாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    • பழைய மாநகராட்சி பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.
    • தொடர் விசாரணையில் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது போலியாக தயார் செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பது தெரிய வந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பகுதியில் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி, தர்மராஜ், வேல்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பழைய மாநகராட்சி பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் சில பாக்கெட்டுகள் இருந்தன. அவை போதை பொருட்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்தது.

    அப்போது அங்கு ஒருவர் மர்மநபர்கள் வைத்திருந்த பொருட்களை வாங்குவதற்காக வந்தார். அவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து 3 பேரையும் பிடித்து தென்பாகம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர் விசாரணையில் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது போலியாக தயார் செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் போலீசார் பயன்படுத்தும் வயர்லெஸ் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுபோன்று அவர்கள் எந்தெந்த மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேனின் வெளிப்புற அளவிற்கும் உட்புற அளவிற்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனை வேப்பூர் போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு சென்றனர்.
    • போதை மற்றும் புகையிலை பொருள் மூட்டைகளை வைத்து இரும்பு தகரத்தால் மூடி கடத்தி வந்தது தெரிய வந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் வழியாக அரசு தடை செய்த போதைப் பொருள்கள் கடத்தல் நடப்பதாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்படி தனிப்படை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், வேப்பூர் சேலம் சாலையில் விளம்பாவூர் சிப்காட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த பொலிரோ மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், வீடு கட்டுமானப் பணிக்கு தேவையான பொருட்கள் இருந்தது. ஆனால், வேனின் வெளிப்புற அளவிற்கும் உட்புற அளவிற்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனை வேப்பூர் போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்

    போலீசாரின் சோதனை யில் தப்பிக்க வேனின் பக்க வாட்டில் அறைகள் அமைத்து அதில் போதை மற்றும் புகையிலை பொருள் மூட்டைகளை வைத்து இரும்பு தகரத்தால் மூடி கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், திட்டக்குடி அருகே அருகேரி கிராம த்தில் மளிகைகடை வைத்தி ருக்கும் மகேந்திரன், (வயது35,) அதே கிராமத்தை சேர்ந்த தெய்வமணி (வயது 25), பொலிரோ வேன் டிரைவரான ஆரோக்கிய சாமி (வயது 33), ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பு என்றால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
    • சிறைக்கு வாகனம் திரும்பியபோது வழக்கம் போல் வாகனத்தை சிறை துறையினர் சோதனை செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    ஜெயிலில் மருத்துவ மையமும் உள்ளது. ஆனால் கைதிகளுக்கு உடல்நிலை பாதிப்பு என்றால் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

    இதுபோல் கடந்த 23-ந் தேதி கைதி ஒருவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவரை சிறை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்சை சிறைத்துறை காவலர் ஜெயக்குமார் ஓட்டிச் சென்றார்.

    பின்னர் சிறைக்கு வாகனம் திரும்பியபோது வழக்கம் போல் வாகனத்தை சிறை துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவரின் இருக்கையின் கீழ் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள்(ஹான்ஸ் பொட்டலங்கள்) இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த போதை பொருட்கள் ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கோர்ட்டுக்கு அறிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சிறை கைதிகளுக்கு சப்ளை செய்ய ஆம்புலன்சில் போதை பொருள் கடத்திய சிறைத்துறை டிரைவர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறைத்துறை டிரைவர் ஜெயக்குமார் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

    • திண்டிவனத்தில் போலீசார் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க விடிய விடிய வாகன சோதனை ஈடுப்பட்டனர்.
    • விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, அந்நிய மதுபானகள்,போதை மாத்திரைகள்,ஆகியவை அதிகளவில் விற்பதாக தகவலின் பெயரில் விற்பனையை தடுக்கும் வகையில் திண்டிவனம் ஏ.எஸ்.பி.அபிேஷக் குப்தா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் பெயரில் நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி, போலீஸ்காரர்கள் செல்வம், வரதராஜ், மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி, போலீஸ்காரர்கள் செல்வம், வரதராஜ், மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர்.விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

    ×